states

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கார் மோதி சிறுவன் பலி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபு தஹிர் கானின் கார் மோதி, 6 வயது சிறுவன் பரிதாபமாக பலியானார். 
மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பிப்ரிகாலி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபு தஹிர் கானின் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, 6 வயது சிறுவன் மீது கார் மோதியதில் அச்சிறுவன் பரிதாபமாக பலியானார். இதை அடுத்து, போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, எம்.பி-யின் கார் ஓட்டுநரை கைது செய்ததுடன் காரை பறிமுதல் செய்துள்ளனர்.